இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில் நேற்று (26.12.2024) காலமானார்.
எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மன்மோகன் சிங் (Manmohan Singh, 26 செப்டெம்பர் 1932ம் ஆண்டு பிறந்தார். இவர் இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மன்மோகன் சிங் கா, பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்தார்.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இவரது குடும்பம் இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர். இவர் அங்குள்ள இந்துக் கல்லூரியில் பயின்றார். இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.
பொருளாதாரத்தில் First Class Honours பட்டம் , கேம்பிரிச் பல்கலைக்கழகம், (1957)
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர், இந்தியா மூத்த விரிவுரையாளர், பொருளாதாரம் (1957-1959), வாசிப்பாளர் (1959-1963), பேராசிரியர் (1963-1965)
பொருளாதாரத்தில் D.Phil பட்டம், Nuffield கல்லூரி at ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், (1962)
டில்லி பொருளாதார பள்ளி, டில்லி பல்கலைக்கழகம் பேராசிரியர் (அனைத்துலக வர்த்தகம்) (1969-1971),கௌரவப் பேராசிரியர் (1996),
பொருளாதார ஆலோசகர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம், இந்தியா (1971-1972),
இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர் (1972-1976)
கௌரவப் பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டில்லி (1976)
இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி (1976-1980)
இயக்குநர், இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (1976-1980)
செயலர், நிதி அமைச்சகம் (பொருளாதார அலுவல் பிரிவு), இந்திய அரசு, (1977-1980)
ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி (1982-1985)
துணைத் தலைவர், இந்தியத் திட்டப்பணி ஆணையம், (1985-1987)
பொருளாதார விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் (1990-1991)
இந்திய நிதி அமைச்சர், காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் (ஜூன் 21, 1991 – மே 15, 1996)
எதிர்க்கட்சித் தலைவர், இந்திய நாடாளுமன்ற மேலவை
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியப் பிரதமர் (மே 22,2004 – மே 26, 2014 )