சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்று(26) காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது.
டிசம்பர் 26, 2004 அன்று நடந்த இப் பேரழிவில் 35,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள் மற்றும் 5,000 க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனார்கள். அவர்களை நினைவு கூர்ந்து மெளன அஞ்சலி அனுஸ்டிப்பு நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதான நிகழ்வாக இடம்பெற்றது.
மேலும் இன்றைய தினம் தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.