திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஒருவரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நபர்களை தேடும் பணிகள் இரவு முழுவதுமாக கடற்படையினர், பொலிசார் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்திருந்தனர். இந் நிலையில் இன்று காலை ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மருமகன் ஆகியோரை கடல் அலை இழுத்துச் செல்வதை அவதானித்த தந்தை பிள்ளைகளை மீட்பதற்காக கடலில் இறங்கியுள்ளார். இருப்பினும் நீரில் தத்தளித்த இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தந்தையும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.