கொழும்பு – காலி முகத்திடலில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25) இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
இந்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.