சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்று 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அதில் மரணித்த மற்றும் காணாமல்போன உறவுகளுக்காக இன்று காலை 09.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில், குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித் அவர்களின் ஆலோசனைக்கமைய பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் டி.பிரதீப் தலைமையில் குச்சவெளி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சுனாமி அனர்த்தம் தொடர்பான விசேட உரையை குச்சவெளி பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.S.தட்சாயினி மற்றும் பேரழிவின் பாதிப்புகள் மற்றும் பிரார்த்தனைகளை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி ஏ.ஆர்.பர்சூக் அவர்களும் நிகழ்த்தினர்.