துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், விசாரணைகள் தொடர்வதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்தை அடுத்து தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும் , வெடிபொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையின் ஒரு பகுதியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைக்காக அங்கு வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.