தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்கள், தோட்ட நிர்வாகத்தால் வெளியேற்றப்பட முயற்சிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், குறிப்பிட்டுள்ளார்.
தோட்டங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களை நிர்வாகத்தால் வெளியேற்றக் கூடாது என்பதையும், புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தோட்டங்களில் வாழும் மக்கள், எக்காரணம் கொண்டும், தோட்ட நிர்வாகிகளால் வெளியேற்றப் படக்கூடாது என்ற அவசர தடை பணிப்புரையைத் தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.