சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி – ஆசிரியர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை (23) பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த 8பவுண் நகைகள், 200 கனேடியன் டொலர் மற்றும் 35ஆயிரம் ரூபாய் இலங்கைப் பணம் ஆகியன திருடப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. சாவகச்சேரி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


