சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (23/12/2024) மாகாண கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் திரு.சுந்தரலிங்கம் பிரதீப், சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தன, பாராளுமன்ற உறுப்பினரும் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமான திரு.சாந்த பத்மகுமார,சுனில் ராஜபக்ஷ ஆகியோர்களால் வழங்கி வைக்கப்பட்டது.