திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரத்தில் அமைந்துள்ள மதுபானசாலையில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று (22) மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் 45, 47, 37 வயதுடைய மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 20, 25 வயதுகளையுடைய இருவரை மூதூர் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது அடுத்த 14 நாட்களுக்கு சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
அதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த மூன்று பேரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருவண்ணாமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.