களனி திப்பிட்டிகொட பகுதியில் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரினால் தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து கடந்த 04ஆம் திகதி பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 35 மற்றும் 53 வயதுடைய களனி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
பெண்ணொருவரிடம் 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய குற்றம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்படி, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலுகம பகுதியிலும் பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிய சந்தி பகுதியிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.