பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்துதல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனத்தை செலுத்துவதை முற்றாக தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன், பண்டிகைக் காலங்களில் அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுவதனால் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் என அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.