இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்துக்குச் சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) வாழ்த்துத் தெரிவித்தவரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் (ரி.ஐ.டி.) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தைப் பிரசுரித்து பிறந்த தின வாழ்த்து நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது.
பிரபாகரனின் படத்துக்குக் கீழ் அந்த நபரின் சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த தின வாழ்த்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.
இவ்வாறு பிறந்த தின வாழ்த்துக்களைப் பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.