ஆப்கானிஸ்தானில் இன்று (22) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டரில் ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ADVERTISEMENT
இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.