பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்தும் லொறி ஒன்றும் மோதியதில் 37 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலில் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து சால் பாலோ நகர் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் 45 பேர் பயணம் மேற்கொண்டனர். தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது பேருந்தின் டயர் வெடித்தது. நிலை தடுமாறிய பேருந்து அந்த வழியாக எதிரே வந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 38 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். விபத்து தொடர்பில் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பிரேசில் அதிபர் லூலா டா சில்வா இரங்கல் தெரிவித்துள்ளார்.