சிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 30.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
128 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இதன்படி, 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.