ஜேர்மனியில் மேக்டிபார்கில் உள்ள ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) மாலை ஒரு கார் வேண்டுமென்றே கூட்டத்திற்குள் நுழைந்து பொதுமக்கள் மீது மோதியதில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 68 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது மாநிலத்திற்கும் அதன் தலைநகரிற்கும் துயரமான நாள்.
100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் உட்பட அவசரகால பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கவும், மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் விரைந்து வந்தனர்.
சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார், 2006 இல் ஜேர்மனிக்கு வந்த இவர் நிரந்தர வதிவிட ஆவணத்தை பெற்றவர் எனவும் சமீபத்தில் இவர் மக்டர்பேர்க்கிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பேர்க்கில் மருத்துவராக பணிபுரிந்திருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் தனியாக இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார், வேறு எவரும் இணைந்து செயற்பட்டதாக தகவல் இல்லை என சம்பவம் இடம்பெற்ற மாநிலத்தின் உள்துறை அமைச்சர் சக்சனி அல்ஹாட் தெரிவித்துள்ளார்.