2019 ம் ஆண்டு காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட சிற்றூழியர்களுக்கான நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண ஜென ரவிய சுகாதார சேவைகள் சங்கத்தின் செயலாளர் திரு.முகுந்தன் தெரிவித்துள்ளார்
வடமராட்சியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்
வடமாகாணத்தில் கனிஷ்ட ஊழியர்கள் மிகவும் பற்றாக்குறையாக காணப்படுகின்றது.2018ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி, ஆளுநர் மற்றும் சுகாதார சேவைகள் அமைச்சருக்கும் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடிதம் அனுப்பியிருந்தோம்
அதனடிப்படையில் 2019ம் ஆண்டு 389பேருக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டது.அதன்பின்பு அரசியல் வாதிகள் சிலரின் தலையீட்டால் 389 பேருக்கும் வழங்கப்பட்ட நியமனம் நிறுத்தப்பட்டது.
நிரந்தர நியமனம் கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளோம்.ஆனால் இதுவரை 389பேருக்குமான நியமனம் வழங்கப்படவில்லை
வடமாகாணத்தில் அதிகளவா சிற்றூழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.புதிய யுனிட்டுகளை நிறுவியுள்ளதால் அதற்கான ஆளனி பற்றாக்குறை நிலவி வருகின்றது.இருக்கின்ற ஆளணிகளும் ஓய்வில் செல்வதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது
இவற்றை மாண்புமிகு ஜனாதிபதி கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்