கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள இரணைமடு பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சந்தையில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் மற்றும் சந்தையின் வசதிகளை மேம்படுத்தி தருமாறும் கோரி சந்தை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
குறித்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் செ.செல்வகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த சந்தையினுடைய வசதிகளை படிப்படியாக செய்வதற்கு ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் படிப்படியாக செய்யப்படும் என தெரிவித்தார்.