கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாபெரும் இரத்ததான முகாம் கல்முனை கடற்கரை வீதி, அல்-புஸ்ரா ஆழ்கடல் மீனவர் சங்க காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை 20.12.2024 இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரியும், பதில் வைத்திய அத்தியட்சகருமான ஏ.ஆர்.எம்.ஹாரிஸ், பொது சுகாதாரப் பிரிவு மற்றும் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி ஏ.எல். பாறூக் ஆகியோருடன் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரீ. மருதராஜன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்முனை கிளை தலைவர் மெளலவி முர்ஷித் முப்தி ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இங்கு அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.