முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் பயணிகள் 103 பேருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று(20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
படகில் வந்தவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும், பிரதேச செயலகமும் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.