கொட்டாவை, ஹோகந்தர பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 66 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்துள்ளதாகக் கூறப்படும் 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.