புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரனகஹவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுமியொருவர் நேற்றிரவு(18) உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற மின் கம்பியில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முயன்ற போது குறித்த சிறுமி மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதன் பின்னர் அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் புத்தளம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.