வடக்கு மாகாணத்தில் பிரண்டிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ‘ஸ்மார்ட் போர்ட்களின்’ பயன்பாடு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று புதன்கிழமை (18.12.2024) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் சமூகப்பொறுப்பு வேலைத்திட்டத்தின் (சி.எஸ்.ஆர்.) கீழ் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு 387 ‘ஸ்மார்ட் போர்ட்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் பயன்பாடு வடக்கு மாகாணத்தில் சராசரியாக 76 சதவீதமாக உள்ளதாகவும் அத்துடன் வடக்கு மாகாணமே இலங்கையில் முதலிடத்தில் உள்ளதாகவும் பிரண்டிக்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.எதிர்காலத்தில் இந்த வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவதன் தேவைப்பாடு மற்றும் அடுத்த ஆண்டு சராசரியை 90 சதவீதமாக நிர்ணயித்து வேலைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட் ஆகியோருடன் பிரண்டிக்ஸ் நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.