குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஹிந்த பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் செவ்வாய்க்கிழமை (17) குருவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவராவார்.
குருவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.