The last leaf என்கின்ற கருப்பொருளில் சட்டப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் இலங்கையில் முதன்முதலாக யாழ் மண்ணில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலான தமது விழிப்புணர்வு பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும், யாழ்ப்பாணம் ஆனைகோட்டை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சமூகக் குழுவினருமாக மொத்தமாக நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு யாழில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான சட்டங்களையும் மேலும் எவ்வாறு சூழல் வளங்களின் நிலைபேண் அபிவிருத்தியை பேண முடியும் எனவும், பொதுத்தொல்லை, கழிவு முகாமைத்துவம், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்க அறிக்கை போன்ற பல முக்கிய புள்ளிகளையும் விளக்கி விழிப்புணர்வு செயலமர்வினை நடாத்தி முடித்தனர்.
Journey to greenie என்கின்ற கொள்கைக்கேற்ப பூகோளத்தை பசுமைப்படுத்தும் துடிப்பில் தங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயணம் மேலும் பல மாவட்டங்களை நோக்கி நகரும் என முன்மொழியப்பட்டு இருந்தமை முக்கியமாக குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.


