தென்பசுபிக் தீவு நாடான வானுட்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிக்டராக அமைந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமது நாட்டுக்கும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என நியூசிலாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 57 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தையடுத்து இராட்சத அலைகள் உருவாகிய நிலையிலேயே வானுட்டு நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேவேளை, வானுட்டு நாட்டில் உள்ள ஆஸ்திரேலியர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.