அமெரிக்காவில் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பாடசாலை உள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பாடசாலையில் நேற்று துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றது. துப்பாக்கி பிரயோகத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
அதேவேளை, துப்பாக்கி பிரயோகம் நடத்தியது 15 வயது சிறுமியொருவர் என்பதும் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் அவரும் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.