அநுராதபுரம் தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தலாவ கம்பிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீடொன்றை உடைத்து சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தலாவ பொலிஸ் உத்தியோகத்தர் குழுவினால் கடந்த சனிக்கிழமை (14) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது பொலிஸ் அதிகாரிகளை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.