அநுராதபுரம், ராஜாங்கனை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15)இரவு போதைப்பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் 46 வயதுடைய பஹளமாரகஹவெவ பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய ராஜாங்கனை பொலிஸ் பிரிவின் யாய 17 பஹளமாரகஹவெவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 46 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 18 கிராம் 450 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் ஆகியவற்றை ராஜாங்கனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்காக நீதிமன்ற தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.