உலக உணவுத்திட்டத்தின் கீழ் ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட Mop உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்கும் பணி இன்று(16) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பூநகரி கமநலசேவை நிலையத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.
நீர்ப்பாசன காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோ வீதமும், மானாவாரி காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வீதமும் வழங்கப்பட்டது.
இந்த உரமானது பூநகரி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட 5000ற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இன்றைய தினம் சின்ன பல்லவராஜன்கட்டில் 145 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டது.