யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மெனிக்பாம் ஞானப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலையில் உள்ள 67 மாணவர்களுக்கு 100,500 ரூபா பெறுமதியான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
இதில் வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் சிவகஜன், வெங்கல செட்டிகுளம் பிரதேச உத்தியோகத்தர் சுஜேந்திரன், கிராம அமைப்புக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இன்று காலை 6 மணிமுதல் சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசக முற்பிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.