வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவல வத்தேகம நகரில், வீதியில் பயணித்த பொலிஸ் அதிகாரி மீது கார் ஒன்று நேற்று சனிக்கிழமை (14) மோதியதில் பொலிஸ் அதிகாரி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நாரன்தண்ட வீதி, வத்தேகம பகுதியைச் சேர்ந்த, மாத்தளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 58 வயதுடைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆவார்.
வத்தேகமவிலிருந்து மாத்தளை நோக்கிச் பயணித்த கார் வீதியோரம் சென்றுகொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது மோதிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் தப்பியோடிய காரின் சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.