கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் செயற்படும் கலைஞர்களை ஒன்றிணைத்து கிளிநொச்சி மாவட்ட கலைஞர் சங்கம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மாவட்டத்திலுள்ள கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு கலைஞர்கள் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
தலைவராக வி.தேவகுமார், செயலாளராக ஆ.செல்வராஜ், பொருளாளராக ந.தனேஸ்வரன், உள்ளிட்ட 09 பேர் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.