தனமல்வில – பராக்கிரம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 24 வயதுடைய ஹந்தபானாகல, வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தனமல்வில – வெல்லவாய வீதியில் பயணித்த பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது தனமல்வில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.