தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், மாவட்டக் கிளையின் செயலாளர் வீரவாகு விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில், கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.