பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், முன்னாள் போராளிகளை புலனாய்வாளர்கள் அச்சுறுத்துவதையும் உடன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண பெண் மனித உரிமைகள் அமைப்பினை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
திருகோணமலையில் இன்று (14)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கை அரசு ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயம் இதனை சட்ட மூலமாக உருவாக்க வேண்டும்.
வடகிழக்கில் பெண் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக பாரிய அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர். பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். உடல், உள பாலியல், இணைய வன்முறை என பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இதனை நிறுத்தி கடுமையான சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் .
குறிப்பாக பெண் மனித உரிமை செயற்பாட்டாளரில் ஒருவரான நவரத்ணம் அஞ்சலி தேவி 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தும் இவ்வாறான தீர்ப்புக்கள் வரவேற்கத்தக்கது. இதனை வலியுறுத்தியே அரசாங்கத்துக்கு கோரிக்கையாக முன்வைக்கிறோம் என்றனர்.

