அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
ADVERTISEMENT
எதிர்வரும் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சபாநாயகர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்று அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.