சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் நேற்று (12) சம்மாந்துறை பிரதேச செயலக சுதேச வைத்திய சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.டி.ஷம்ஷத் தலைமையில் விளினையடி-01 கிராம சேவகர் பிரிவில் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் நிதி ஒதுக்கீடின் மூலம் இடம்பெற்ற இவ் வைத்திய முகாமில் பாரம்பரிய வைத்தியர் எம். ஏ. ஆரிபா உம்மாவின் வைத்திய மாணவர்கள் எம்.எஸ்.எம்.நபீஸ், எம்.நஜீம்,எம் நளீம் ஆகியோரினால் இலவச வைத்திய சேவை முகாம் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இவ் வைத்திய முகாமுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB) கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை ஆயுர்வேத பாதுகாப்பு சபைத் தலைவர் டாக்டர் ஏ.எல்.எம் மஜீட்,செயலாளர் டாக்டர் எம்.சீ.எம் காலீத்,பொருளாளர் வைத்திய மாணவன் ஏ.எல்.எம் நஹீம் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.