மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் நேற்றைய தினம் (12) சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கிக் கொலை செய்த சம்பமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 11.00 மணியளவில் உயிரிழந்தவர் தனது மனைவியின் சகோதரருடன் மது அருந்தி விட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் அது தகராறாக மாறி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பில் கணவன் – மனைவி இருவரையும் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக தடவியல் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.