ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நேற்றைய தினம் 55000மெற்றிக்தொன் MOP உரம் (எம்.ஓ.பி ) கையளிக்கப்பட்டது.
அந்த வகையில் குறித்த உரங்கள் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை ஆகிய கமநல சேவை நிலையங்களுக்கு இன்று கொண்டு வரப்பட்டன.
குறித்த உரங்கள் விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.