புத்தளம் – மதுரங்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஜிரவத்தை வீதிச் சந்திக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
மதுரங்குளிய பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் இரவு நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.