தம்பலகாமம் ஜனநாயக பங்குதாரர்களுக்கான கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று(09) இடம்பெற்றது .
இக் கலந்துரையாடலில் பிரதேசத்தில் காணப்படும் அபிவிருத்திசார் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு அதற்குரிய தீர்வுக்கான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், கடந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பிரதேச சபை நிறைவேற்றியமைக்கு சிவில் அமைப்புக்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இக் கலந்துரையாடலில் AHRC நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.