கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியின் கௌடங்கஹா பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகேவிட பகுதியைச் சேர்ந்த 39 வயதான நபர் ஒருவரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த பகுதியில் உந்துருளியில் பயணித்த நபர் மீது மற்றுமோரு உந்துருளியில் வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டினை அடுத்து சந்தேக நபர் தப்பிச் சென்ற நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
அதேநேரம், தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கம்பஹா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.