பொலன்னறுவை சோமாவதி வீதியில் நேற்று சனிக்கிழமை (07) உந்துருளி மோதியதில் பாதசாரியொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடையவர் ஆவார்.
விபத்தில் காயமடைந்த பாதசாரி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும், உந்துருளியில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலனறுவை பொலிஸார் தெரிவித்தனர்.