மாதம்பே மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் 4 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (07) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தளம் முகாமின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசங்களை சேர்ந்த 41 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவர்.
மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.