நுவரெலியா அரச பேருந்து டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பத்து இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அதே டிப்போவின் காசாளர் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் பதுளை நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா கல்பாய பிரதேசத்தை சேர்ந்த கே.லோகேஸ்வரன் என்ற 85 வயதுடைய நபரே வியாழக்கிழமை (05) பிற்பகல் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.