ஐவரி கோஸ்ட் நாட்டின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ப்ரோகோவா என்ற கிராமத்தில் 2 மினி பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேருந்துகளும் தீப்பிடித்துள்ளன.
பேருந்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐவரி கோஸ்ட்டில் பாழடைந்த சாலைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.