வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 300 குடும்பங்களுக்கும், யாழ்ப்பாணத்தில் 250 குடும்பங்களுக்கும், முல்லைத்தீவில் 50 குடும்பங்களுக்குமாக சுமார் 600 குடும்பங்களுக்கான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.