பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலயாவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பதவிய, போகஹவெவ, பாலயாவெவ பகுதியைச் சேர்ந்த, 74 வயதுடைய முத்துமெணிக்க எனும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இந்த தாய் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.